மாணவ - மாணவியருக்கான சீருடை, புத்தகம் தயார்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கான சீருடை, புத்தகம், நோட்டு எழுது பொருட்களை அனுப்பும் பணியில் பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின், 2026- - 27ம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஜூன் 1 அன்றும், 1 - 3ம் வகுப்பு வரை, வரும் 4ம் தேதியன்று பள்ளிகள் தொடங்கும் என்றும் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதை முன்னிட்டு காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கான சீருடை, புத்தகம், நோட்டு எழுது பொருட்கள் அனுப்பும் பணியில் பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி பள்ளிகள் என, மொத்தம் 107 உள்ளன. இதில் 69 தொடக்க பள்ளிகள், 38 நடுநிலை பள்ளிகள். இதில் 69 தொடக்க பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், சீருடைகள், பாடப் புத்தகங்களை நேற்று பெற்றுச் சென்றனர்.

மாணவ - மாணவியருக்கான பாடப்புத்தகம், நோட்டு, ஒலிமுகமதுபேட்டை பள்ளியிலும், சீருடை ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு பள்ளியிலும், வண்ண பென்சில்கள், கிரையான்கள் சிறுகாவேரிப்பாக்கம் வட்டார வள மையத்திலும் வழங்கப்பட்டது.

பாடப்புத்தகங்கள், சீருடைகளை நேரடியாக பள்ளிகளுக்கு வந்து வழங்காமல் அலைக்கழிப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

Advertisement