தாம்பரம் - சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை:கோடை விடுமுறையையொட்டி, தாம்பரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

* தாம்பரத்தில் இருந்து வரும் 26, ஜூன் 2ம் தேதிகளில் மாலை 6:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 6:30 மணிக்கு சந்திரகாச்சிக்கு செல்லும்

* சந்திரகாச்சியில் இருந்து வரும் 27, ஜூன் 3ம் தேதிகளில் இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் காலை 10:30 மணிக்கு தாம்பரம் செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement