அரசு பஸ் நடத்துனரை தாக்கியவர் கைது

பொதட்டூர்பேட்டை, மே 22-–

அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், 55. இவர், பொதட்டூர்பேட்டையில் இருந்து, சென்னை செல்லும் அரசு பேருந்து தடம் எண்:201ல் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.

நேற்று, இவர் பணியில் இருந்த போது, சிறுகுமி கூட்டுசாலை அருகே பேருந்தில் ஏறிய நபர், ‘க்யு.ஆர்’ செயலி வாயிலாக டிக்கெட் பெற முயன்றுள்ளார்,

ஆனால், அந்த பரிவர்த்தனை சரியாக மேற்கொள்ளப்படாததால், நடத்துனர் ஈஸ்வரனுக்கும், அந்த பயணிக்கும் தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஈஸ்வரனை அந்த நபர் தாக்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், தகராறில் ஈடுபட்ட அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர், தர்மபுரி மாவட்டம், பாளையம் புதுாரைச் சேர்ந்த முனியப்பன், 27, என, தெரியவந்துள்ளது.

Advertisement