காக்ரோச் ஜண்டா பார்ட்டி இயக்கத்திற்கு மத்திய அரசு தடை

19

புதுடில்லி:வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் கூறிய கருத்துக்கு எதிராக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'காக்ரோச் ஜண்டா பார்ட்டி' இயக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வேலை இல்லாத இளைஞர்கள் நாட்டின் கரப்பான் பூச்சி (காக்ரோச்) மற்றும் சமூகத்தின் ஒட்டுண்ணி என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விமர்சித்திருந்தார். இதற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த மே 16ம் தேதி அபிஜீத் டிப்கே என்பவரால் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற நையாண்டி அரசியல் இயக்கத்தை தொடங்கப்பட்டது.

சமூக வலைதளப்பக்கத்தில் துவங்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் பக்கத்தை பின் தொடர்வர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்தநிலையில், 'காக்ரோச் ஜண்டா பார்ட்டி' இயக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. சுமார் ஒன்றரை கோடி பாலோயர்களைக் கொண்ட அந்த இயக்கத்தின் சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டது. இது இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, 'Cockroach Is Back' என்ற புதிய பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அதனை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.

Advertisement