ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக பா.ஜ., பதிலடி
சென்னை: 'உங்கள் பொய் மூட்டைகள், இன்ஸ்டா ரீல்ஸ்க்கு உதவலாம்; நிஜத்தில் மிக விரைவில் அம்பலப்படுவீர்கள்' என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு, தமிழக பா.ஜ., செயலர் வினோஜ் செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
பொய்களை மட்டுமே பேசுவதை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாக நிறுத்த வேண்டும். அவர் தங்களை, மதச்சார்பற்ற அரசு என்பது முதல் பொய். த.வெ.க., அமைச்சரவையில் உள்ள முஸ்லிம் லீக் கட்சி, முஸ்லிம்களுக்கு மட்டும் தேர்தலில் சீட்டு கொடுத்து நடத்தப்படும் மதவாத கட்சி.
திருப்பரங்குன்றம் மலை மீது மாமிசம் எடுத்துச் சென்று, ஹிந்துக்கள் உணர்வை புண்படுத்திய நவாஸ்கனி எம்.பி., இருக்கும் கட்சி எப்படி மதச்சார்பற்றதாகும்?
அடுத்து, அ.தி.மு.க., ஆதரவை கோரவில்லை என்பது இரண்டாவது பொய். அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியின் இல்லத்திற்குச் செல்ல தைரியமில்லாமல், புஷ்பா பட பாணியில், இரண்டாம் கட்ட தலைவரின் இல்லத்திற்கு த.வெ.க., தலைவரான முதல்வர் விஜய் சென்றது ஏன்?
உங்கள் பொய் மூட்டைகள், 'இன்ஸ்டா ரீல்ஸ்'க்கு உதவலாம்; நிஜத்தில் மிக விரைவில் அம்பலப்படுவீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த லாட்டரி பொய்யுரைப்பதில் திரவிடிய கட்சியை தூக்கி சாப்பிட்டுவிடுவான் போலிருக்கு.
இவர்தான் த வெ க கட்சி மற்றும் ஆட்சியையே நடத்துகிறார் பாவம் விஜயும் அவருக்கு வாக்களித்த குஞ்சுகளும் ஏதோ விஜய் ஆட்சி நடப்பதாக நினைத்து கொண்டிருக்குது கள்
சூப்பர். சரியான கருத்து.மேலும்
-
விளம்பர செய்தி... செயின்ட் ஆண்டனிஸ் பள்ளி சாதனை
-
ஞாயிறு: சோழர் பட்டறையில் துாரிகைகளின் திருவிழா கேன்வாசில் கவிதைபாடும் ஓவியங்கள்
-
அலுவலக விருப்பம்: பி.எஸ்., மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் 26ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
-
துாய்மை இயக்கப் பணி கூடுதல் கலெக்டர் ஆய்வு
-
தி.மு.க., ஆய்வு குழு வருகை மாவட்ட செயலாளர் தகவல்
-
தகவல் சுரங்கம்