கு.ப.கிருஷ்ணனுக்கு வாரிய தலைவர் பதவி

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக, மாஜி கு.ப.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் போட்டியிட்டார். அ.தி.மு.க., வேட்பாளர் லீமாரோஸிடம், இவர் தோல்வி அடைந்தார். த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், கு.ப.கிருஷ்ணனுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement