காப்பர் டி எப்போது பொருத்தலாம்? பெண்களுக்கு அரசு விழிப்புணர்வு

கோவை:அடிக்கடி கரு தரிப்பது அல்லது கரு கலைப்பது நடந்தால், பெண்கள் பலவீனம் ஆவதோடு, ஆரோக்கியமான சந்ததி உருவாகாமல் போகலாம் என அரசு எச்சரித்துள்ளது.

எனவே, முதல் குழந்தை பிறந்த 48 மணி நேரத்திற்குள் காப்பர் டி எனும் சிறிய கருத்தடை சாதனம் பொருத்தி கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது. அதை அரசு மருத்துவமனையில் பொருத்தி கொண்டால், ரூ. 300 ஊக்க தொகையாக தரப்படுகிறது.

இன்னொரு குழந்தை பெற வேண்டும் என முடிவு எடுத்தால், டாக்டரிடம் சென்று அந்த கருவியை நீக்கி கொள்ளலாம், என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் கவுரி கூறுகையில்,'' கடந்தாண்டில் 11,927 பேருக்கு காப்பர் டி பொருத்தப்பட்டது. அதில் 10,399 பேர் அரசு மருத்துவமனையில் பொருத்தி கொண்டவர்கள். மாத விலக்கான ஏழு நாட்களுக்குள் பொருத்தி கொள்ளலாம்'' என்றார்.

Advertisement