பேரூர் கல்யாணிக்கு ஷவர் வசதி
படம்: சதீஷ் பாபு
தொண்டாமுத்தூர், மே 22-:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கல்யாணி என்ற யானை, பகலில் கோவிலிலும் இரவில் நொய்யல் ஆற்றங்கரை யானை கூடத்திலும் தங்குகிறது.
கல்யாணி குளிப்பதற்காக 60 லட்சம் ரூபாயில் நவீன குளியல் தொட்டியும், நடைபாதையும் அமைக்கப்பட்டது. தொட்டியில் நீர் நிரம்பும் வரை காத்திருந்து கல்யாணி குளித்து வந்தது.
அதை பார்த்த ஒரு பக்தர், தொட்டி நிரம்பும் வரை காத்திராமல் கல்யாணி குளிக்க ஷவர் அமைத்து கொடுக்க நிதி வழங்கினார். அந்த வேலையை சாக்கிட்டு, 5 மாதமாக, யானையை குளியல் தொட்டி பக்கமே விடவில்லை. மூன்று நாள் முன்பு ஷவர் ரெடியானதும், கல்யாணி ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement