மயானத்தில் போதை மாத்திரை விற்றவர் கைது

​கோவை,மே 22–

செல்வபுரம் அருகே சொக்கம்புதூர் மயானம் பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்ற வாலிபரை சோதனையிட்டனர்.

அவரிடம் ‘நைட்ரஷிபம்’ என்ற போதை மாத்திரைகள் இருந்தன. அவர் ஜீவா பாதையை சேர்ந்த அகிலன்,22, என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, அதிக விலைக்கு விற்க வைத்திருந்த 10 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். போதை பொருள் கடத்தல் தடுப்பு கோர்ட்டில் அகிலனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement