பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்: படிக்கட்டு பயணத்தை தவிர்க்கலாம்

மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு, தனியார் பள்ளிகள் ஜூன் 1ல் திறக்கப்பட உள்ளன.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசின் சலுகைகள் பல கிடைப்பதால் இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.ஆனால் பள்ளி நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்களின் பஸ் படிக்கட்டு பயணம் தொடர்கதையாக உள்ளது.

சாகசம் செய்வதாக நினைத்துக்கொண்டு ஆபத்தை உணராமல் படிகளில் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதோடு பள்ளி நேரத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் இத்தகைய நிலை ஏற்படுகிறது. எனவே கூடுதல் அரசு டவுன் பஸ்களை இயக்கி மாணவர்கள் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement