பள்ளி செல்லாத நரிக்குறவர்  மாணவர்கள் கண்டறிந்து பள்ளியில் சேர்த்த சமூக நலத்துறை 

திண்டுக்கல்: திண்டுக்கல்: இடைநிற்றலில் பள்ளி செல்லாத 11 நரிக்குறவர் மாணவர்களை கண்டறிந்த சமூகநலத்துறை அலுவலர்கள் அதில் மூன்று பேரை எரியோடு நடுநிலைப்பள்ளியில் சேர்த்தனர்.

வேடசந்துார் தண்ணீர் பந்தம்பட்டியில் வசிக்கும் நரிக்குறவர்களின் குழந்தைகளான 11 பேர் பள்ளிப் படிப்பை தொடராமல் உள்ளது தெரியவந்தது. சமூக நலத்துறை பணியாளர்கள் 11 மாணவர்களில் முதற்கட்டமாக அபினேஷ் (4ம் வகுப்பு), பரத் (5ம் வகுப்பு), சரவணன் (8ம் வகுப்பு) ஆகியோரை அழைத்து வந்து எரியோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேர்த்தனர். அடுத்தடுத்த நாட்களில் பள்ளிகளில் சேர்க்கை நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் காலின்செல்வராணி, மகளிர் அதிகார மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் தெரிவித்தனர்.

Advertisement