துார்வாரும் பணியை தொடங்குகள்: மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

சென்னை:மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகளை துார்வாரும் பணியை தொடங்கும்படி, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

அப்போது, மாநகராட்சி கமிஷனர் சமீரன் பேசியதாவது:

சென்னையில் குப்பை சேகரித்தல், பயோ மைனிங் மேற்கொள்ளும் பணிகளில் தனி கவனம் செலுத்தி, துாய்மையாக பராமரிக்க வேண்டும். வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நீர்நிலைகள், மழைநீர் வடிகால் துார்வாருவதுடன், அப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதுடன், அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையும் தீவிரமாக செய்ய வேண்டும்.

அதேபோல், மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் புகார்கள்மீது, உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

***

Advertisement