வீட்டு கடன் பெற்றவர் இறந்ததால் ரூ.10 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
கோவை:பி.என்.புதுாரை சேர்ந்தவர் தேவ பிரியா. கணவர் ராஜ்குமார், தனியார் வங்கியில் 75 லட்சம் ரூபாய் கடன் பெற்று 2021 ல் வீடு கட்டினார்.
வங்கி கடனுக்காக பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்சில், 1.34 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தார். கடன் தவணையும், இன்சூரன்ஸ் பிரீமியமும் ஒழுங்காக செலுத்தி வந்தார். திடீரென 2023 ல் மாரடைப்பால் ராஜ்குமார் இறந்தார்.
இதனால், வீட்டு கடன் பாக்கி தொகையை வங்கிக்கு செலுத்தும்படி, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தேவ பிரியா விண்ணப்பித்தார். நிறுவனம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. தேவ பிரியா, நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு போட்டார்.
ஆணைய தலைவர் தங்கவேல் விசாரித்தார். ''ராஜ்குமார் பெற்ற வீட்டு கடனில், 10 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டும். சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக, 10,000 ரூபாய் , வழக்கு செலவு 5,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தீர்ப்பளித்தார்.
மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி