வெள்ளி வென்றது இந்தியா * ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில்

உல்லன்பாட்டர்: ஆசிய டேக்வாண்டோவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

மங்கோலியாவின் உல்லன்பாட்டர் நகரில் 9வது ஆசிய டேக்வாண்டோ பூம்சே சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ரூபா பேயர், வெண்கலம் வென்று இருந்தார். ஆண்கள் அணிகளுக்கான 50 கிலோவுக்கு உட்பட்ட எடைப் பிரிவில் இந்தியா சார்பில் ரிங்கோ மீட்டெய், திங்கு சிங், சிங்ளம்பா சிங் இடம் பெற்ற அணி களமிறங்கியது.
அரையிறுதியில் இந்திய அணி, ஈராக்கை வென்று பைனலுக்கு முன்னேறியது. இதில் சீன தைபேவிடம் தோற்க, இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. தவிர, 50 கிலோ பிரிவிலும் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது. 0-65 தனிநபர் பிரிவில் இந்தியாவின் வேலு பாபு முருகேஷ், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

Advertisement