நகை பறிப்பு வழக்கில் கைது

இளையான்குடி;காளையார்கோவில் அருகே உள்ள கொல்லாவயலைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 78. இவர் உறவினர்களுடன் ஏப்.24 மாலை 4:00 மணிக்கு நாகமுகுந்தங்குடியில் உள்ள நாகநாதர் சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றார்.

அப்போது 3 டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத 9 பேர் கோயிலில் இருந்த பெண்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி 50 பவுன் நகைகளை பறித்து தப்பினர். இவ் வழக்கில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் கீழ்மேல்குடி அஜய் என்ற கார்த்தியை 18 கைது செய்தனர்.

Advertisement