படித்துறை இல்லாத ஊரணி

சிங்கம்புணரி:சிங்கம்புணரியில் புனித நீர் குளத்தில் படித்துறை இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இப்பேரூராட்சியில் மேலுார் ரோட்டில் செட்டியார் குளம் ஊருணி உள்ளது. இந்த ஊரணியில் தான் மக்கள் பல்வேறு தேவைகளுக்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரணி மராமத்து செய்யப்பட்டது. அப்போது நான்கு புறமும் இருந்த படித்துறைகள் உடைந்தன. இதனால் மக்கள் இறங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த ஊரணியை தூர்வாரியபோது ஆழமான குழிகள் உருவாகியுள்ளது. இதில் மக்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக பாதுகாப்பான முறையில் நான்கு புறமும் படித்துறைகளை அமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement