வாகனங்கள் மோதி விபத்து வாலிபர்கள் இருவர் உயிரிழப்பு
பாப்பிரெட்டிப்பட்டி: பைக்குகள் மோதியதில், சாலையில் விழுந்த இருவர், கார் மோதி பலியாகினர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பம்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன், 25. கூலித்தொழிலாளி. இவரது உறவினர் விக்னேஷ், 27. இருவரும் பைக்கில் நேற்று முன்தினம் இரவு, தொம்பகலானுாரில் இருந்து, சேலம் - அரூர் ரோட்டில், பாப்பம்பாடி நோக்கி சென்றனர். பைக்கை, விக்னேஷ் ஓட்டினார். இரவு 8:30 மணியளவில், அலமேலுபுரம் அருகே பைக் சென்றது.
முள்ளிக்காடை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன், 60, தன் பைக்கில், சந்திரன், 58, என்பவரை அழைத்துக்கொண்டு, சேலம் - அரூர் மெயின் ரோட்டில், சாலையை கடக்க முயன்றார்.
இதில், விக்னேஷ் ஓட்டி வந்த பைக் மீது மோதியதில், நால்வரும் துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த சமயத்தில், சேலத்திலிருந்து அரூர் நோக்கி வேகமாக வந்த கார், விக்னேஷ், கணேசன் மீது ஏறியதில், இருவரும் பலியாகினர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
-
மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அநீதி; அத்துமீறிய போலீசுக்கு சரியான தண்டனை
-
288 பேரை உயிர்பலி வாங்கிய விபத்து; விமான நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதிப்பு
-
பிரதமர் மோடி - சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் சந்திப்பு
-
அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்!
-
சொல்கிறார்கள் –––––––––– சுகாதாரமும் வருமானமும் தரும் ‘வெண்டை’ சாகுபடி