தேங்காய் பருப்பு விலை உயர்வு
ப.வேலுார்:ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வந்தனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் வாங்கி சென்றனர்.
கடந்த வாரம் நடந்த சந்தையில் ஏலத்திற்கு, 10 ஆயிரத்துக்கு 540 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 150.60 ரூபாய், குறைந்தபட்சமாக, 132.70, சராசரியாக, 146.30 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 8 லட்சத்து, 67 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த தேசிய வேளாண்மை சந்தையில், 11 ஆயிரத்துக்கு, 596 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 151.60 ரூபாய், குறைந்தபட்சமாக, 133.99 ரூபாய், சராசரியாக, 147.80 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 12 லட்சத்து, 53 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
மேலும்
-
கடலாடியில் இரவு நேர டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் புதிய கட்டடம்
-
ஐ.டி.ஐ.,வளாகத்தேர்வு
-
விலை கிடைப்பதால் திராட்சை வாழை சாகுபடி பரப்பு அதிகரிப்பு
-
சூரிய, காற்றாலை மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு; மோடி தலைமைக்கு கமல் பாராட்டு
-
பெண்களை இழிவுபடுத்தி திமுக எம்பி ஆ.ராஜா சர்ச்சை பதிவு; குவியும் கண்டனங்கள்
-
60 நாட்களில் மிகப்பெரிய நிர்வாக மாற்றம்; சொல்கிறார் அமைச்சர் ஆதவ்