அகில இந்திய கூடைப்பந்து போட்டிசதர்ன் ரயில்வே, சென்னை ஐ.ஓ.பி., வெற்றி


கரூர்::அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், சதர்ன் ரயில்வே, சென்னை ஐ.ஓ.பி., அணிகள் வெற்றி பெற்றன.

கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, திருவள்ளுவர் மைதானத்தில் கரூர் கூடைப்பந்து கிளப் சார்பில், எல்.ஆர்.ஜி., நாயுடு சுழற்கோப்பைக்கான, 66வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது.


இதனை, கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல் போட்டியாக, பெண்கள் பிரிவில் சென்னை சதர்ன் ரயில்வே அணியும், கொல்கட்டா நார்த் ஈஸ்ட்ரன் ரயில்வே அணியும் மோதின. இப்போட்டியில், 72க்கு53 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை சதர்ன் ரயில்வே வெற்றி பெற்றது. அடுத்தாக ஆண்கள் பிரிவில் சென்னை ஐ.ஓ.பி., அணி, கேரளா போலீஸ் அணிகள் மோதின. இதில், 83க்கு57 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை ஐ.ஓ.பி., அணி வெற்றி
பெற்றது.

Advertisement