கூலி உயர்வு கேட்டு கலாசி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு:திருச்செங்கோடு டி.சி.எம்.எஸ்., கூட்டுறவு சங்கத்தில், கலாசி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் திருச்செங்கோடு, கொங்கணாபுரம், மல்லசமுத்திரம் பகுதிகளில் கிளைகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் கலாசி தொழிலாளர்களுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் கூலி ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கு 8.5 சதவீதம் கூலி உயர்வு பேசி தீர்வு காணப்பட்டது.
ஆனால் கூலிஉயர்வு ஒப்பந்தப்படி தொழிலாளருக்கு வழங்காமல் கூட்டுறவு சங்க நிர்வாகம் இழுத்தடித்து கொண்டுள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், திருச்செங்கோடு பரமத்தி வேலுார் ரோட்டில் உள்ள டி.சி.எம்.எஸ்., கேட் முன் நடந்தது. கலாசி தொழிலாளர் சங்க தலைவர் கந்தசாமி தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. சி.ஐ.டி.யு., சி.பி.எம்., விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி