கஞ்சா விற்ற 7 பேர் சிக்கினர்

சேலம்; சேலம், வீராணம் போலீசார், ஈச்சாங்காட்டில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து விசா-ரித்ததில், பாரப்பட்டி, மாரியம்மன் கோவில் பகு-தியை சேர்ந்த தேவிபிரகாஷ், 21, என தெரிந்தது. அவரது பையை சோதனை செய்ததில், 1.1 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அம்மாபேட்டை போலீசார், பொன்னம்மா-பேட்டை ரயில்வே கேட் அருகே வாகன தணிக்-கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆட்-டோவை நிறுத்தி சோதித்ததில், 1.25 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. டிரைவரிடம் விசாரித்ததில் அம்மாபேட்டை, கார்ப்பரேட் தெருவை சேர்ந்த அமீர்ஜான், 40, என்பதும், கஞ்சா கடத்தி விற்க முயன்றதும் தெரிந்தது. அமீர்ஜானை கைது செய்த போலீசார், ஆட்டோவுடன் கஞ்சாவை பறி-முதல் செய்தனர்.
கிச்சிப்பாளையம் போலீசார், சத்திய மூர்த்தி நகரை சேர்ந்த கவுதம், 24, குமரன் தெரு ஜீவா-னந்தம், 23, ஆகியோரை கைது செய்து, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கொண்டலாம்பட்டி போலீசார், அம்மாபேட்டை, மக்கான் தெருவை சேர்ந்த மலரவன், 31, என்ப-வரை கைது செய்து, 2.1 கிலோ கஞ்சாவை பறி-முதல் செய்தனர். பள்ளப்பட்டி போலீசார், துரை-சாமி நகரை சேர்ந்த சாமியப்பன், 24, என்பவரை கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேட்டூர் போலீசார், திலகர் நகர், காளியம்மன் கோவில் பின்புறம் வசிக்கும் கூலித்தொழிலாளி நந்தகுமார், 23, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, 1.1 கிலோ கஞ்சா, விற்க பயன்படுத்-திய பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement