அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
பள்ளிப்பாளையம்:: தமிழக சட்டசபை தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,க்கு எதிராக, முன்னாள் அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி துாக்கினர். இவர்கள் அனைவரும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். இதில், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம், பாஸ்கர் தலைமையில் நாமக்கல்லில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட இரண்டு நகர செயலாளர்கள், இரண்டு ஒன்றிய செயலாளர்கள், ஒரு டவுன் பஞ்., செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை, இவர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிர்வாகிகள் பட்டியல், கட்சி தலைமைக்கு அனுப்பப்படவுள்ளதால், சில நாட்களில் இவர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மேலும்
-
2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; அமைச்சர் ஆனந்த் கண்டிப்பான உத்தரவு
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு