ஆ.ராஜாவின் தரக்குறைவான விமர்சனத்துக்கு ஸ்டாலின் கண்டிப்பு

3

சென்னை: ஆ.ராஜாவின் தரக்குறைவான விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், ''திமுகவினர் யாரையும் புண்படுத்த கூடாது'' என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் குறித்து திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ள சர்ச்சை கருத்துக்கு விசிக பதிலடி கொடுத்துள்ளது. திமுக எம்பி ஆ.ராசா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், '' முன் 'ஏற' தரப்பட்ட 'ஏணியும்' மூட ஜாதியை நொறுக்க வேண்டிய 'சிறுத்தையும்' வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி, புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை.


ஈவெராவின் 'காலதேச வர்த்தமான' த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!!'' என குறிப்பிட்டு இருந்தார். இது கடுமையான விமர்சனங்களை கிளப்பிய நிலையில் பதிவை கட்சியின் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் நீக்கிவிட்டார்.
இந்த பதிவிற்கு இணையத்தில் விசிக, முஸ்லிக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் கட்சியினரை கண்டித்து ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கூட்டணி கட்சியினர் விசிக வன்னி அரசு மற்றும் முஸ்லிம் லீக் ஷாஜஹானுக்கும் எனது வாழ்த்துகள். தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கட்சியினர் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.


அண்ணாதுரை வழியிலும், கருணாநிதி வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


@block_G@

அநாகரிக கவிதையில் சொல்வது இதுதான்!

திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற விசிக, முஸ்லிம் லீக் கட்சிகள், தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது, மணந்து கொண்ட கணவரை விட்டு, உடல் உறவு இன்பத்துக்காக இன்னொருவரை தேடி பெண் செல்வதை போன்றது என்று ஆ.ராஜா சொல்லாமல் சொல்லியிருக்கிறார். கவிதை என்ற பெயரில் ராஜா கொட்டிய இந்த வக்கிரத்துக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அதை அவர் நீக்கி விட்டார்.


எனினும், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்த அதிமுக, பாஜ, விசிக, தவெக உள்ளிட்ட கட்சியினர் தங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே தங்கள் மீது மக்கள் கொந்தளிப்பில் இருக்கும் இந்நிலையில் ராஜாவின் பதிவு மேலும் வில்லங்கத்தை உண்டாக்குவதை உணர்ந்த ஸ்டாலின், விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பதிவு வெளியிட்டார். கூடவே, 'கடுஞ்சொல் வேண்டாம்' என்றும் பதிவிட்டுள்ளார்.block_G


@block_Y@

மற்றொரு பதிவு

அப்படியும் அடங்காத ராஜா, பழைய பதிவை நீக்கி விட்டு இன்னொரு பதிவை போட்டுள்ளார். கவிதை வடிவத்தில் இருக்கும் அந்த பதிவு இதோ! அந்த பதிவில் கூறியிருப்பதாவது: என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ். இவ்வாறு ஆ.ராசா கூறியுள்ளார். block_Y

சிறப்பு வீடியோ!



கூனி வளைந்து.. தவெகவில் விசிக என ஆ.ராஜாவின் விமர்சனம் குறித்து வீடியோ; சொன்னது என்ன தெரியுமா?

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement