உ.பி.,யில் கொளுத்தும் வெயில்; டாப் 50 நகரங்களில் 31 இங்க தான்!
நமது சிறப்பு நிருபர்
உலகில் நேற்று (மே 22) மிக அதிக பகல் நேர வெப்பம் பதிவான டாப் 50 நகரங்களும் இந்தியாவை சேர்ந்தவை. அவற்றில் 31 நகரங்கள் உ.பி., மாநிலத்தில் உள்ளன.
கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் கடும் பாதிப்புகளை சந்திக்கின்றன. உலகில் நேற்று (மே 22) மிக அதிக பகல் நேர வெப்பம் பதிவான டாப் 50 நகரங்களும் இந்தியாவில் தான் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் உள்ள 31 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.
உலகளவில் அதிக வெப்பம் பதிவான 50 நகரங்களில், உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள மொராதாபாத், அக்பர்பூர், சித்தார்த்நகர், எட்டாவா, புடான், பண்டா, பிரோசாபாத், ஹத்ராஸ், மைன்புரி, பிரயாக்ராஜ், சீதாப்பூர், காஜிபூர், மதுரா, ஆக்ரா, ராம்பூர், பரேலி, ஜாப்பூர், பிரேலி, ஜாப்பூர், ஷாஹ்ஜான்பூர் உள்ளிட்ட 31 நகரங்கள் தான்.
அலிகார், சம்பல், அசம்கர், வாரணாசி, பிலிபிட், பல்ராம்பூர், முசாபர்நகர், பஹ்ரைச், ஷாம்லி மற்றும் அம்ரோஹா ஆகிய இடங்களில் 43 டிகிரி செல்ஷியஸ் முதல் 44 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. மஹாராஷ்டிராவின் நாக்பூர் 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது. ராய்ப்பூர், சந்திராபூர், மொராதாபாத் நகரங்களும் அதிக வெப்பம் பதிவான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இமய மலைத்தொடருக்கு சில நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மாநிலத்தில் இவ்வளவு உஷணமா?
இங்கே ஊட்டி மாதிரி குளிருது
இருக்கிற மரத்தை எல்லாம் வெட்டி சாய்த்து விடுங்கள், இன்னும் சூப்பரா இருக்கும்மேலும்
-
புதிய கிழக்கு இந்திய கம்பெனிகளாகும் பன்னாட்டு நிறுவனங்கள்:ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை
-
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை: முதல்வர் விஜய் உறுதி
-
15 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று கிடைச்சாச்சு!
-
கடனை செலுத்தியவர் மீது வழக்கு ரூ.60,000 இழப்பீடு வழங்க உத்தரவு
-
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
-
நிரம்பிய கழிப்பறை கழிவுநீரால் அரசு மருத்துவமனையில் அவதி