சீனாவில் துயர சம்பவம்; நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 80 பேர் பலி
நமது நிருபர்
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 80 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொழிலாளர்கள் 201 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எரிவாயு கசிந்து வெடித்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 80 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தொழிலாளர்கள் 201 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.மீட்புப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப் படவேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை எட்டு பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உடல்களை மீட்கும் பணியும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஆழ்ந்த இரங்கல்.உயிர் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை அடைய வேண்டுகிறேன்.
மிகவும் சோககரமான சம்பவம். அவர்கள் நமக்கு எதிரியாக இருந்தாலும், இந்த நேரத்தில் துக்கப்பட்டுதான் ஆகவேண்டும். இந்தியா அவர்களுக்கு இந்த நேரத்தில் உதவி புரிந்திடவேண்டும். அதை நான் சொல்லாமலேயே திரு மோடிஜி அரசு செய்யும்.மேலும்
-
புதிய கிழக்கு இந்திய கம்பெனிகளாகும் பன்னாட்டு நிறுவனங்கள்:ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை
-
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை: முதல்வர் விஜய் உறுதி
-
15 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று கிடைச்சாச்சு!
-
கடனை செலுத்தியவர் மீது வழக்கு ரூ.60,000 இழப்பீடு வழங்க உத்தரவு
-
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
-
நிரம்பிய கழிப்பறை கழிவுநீரால் அரசு மருத்துவமனையில் அவதி