ஜாதி பார்த்து முதல்வர் விஜய் வாய்ப்பளிக்கவில்லை; அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி
சென்னை: ஜாதி பார்த்து முதல்வர் விஜய் வாய்ப்பளிக்கவில்லை எனக்கூறி விமர்சனத்திற்கு அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் ரமேஷ் கூறியதாவது: நமது கட்சியின் கொள்கை என்பது மதசார்பற்ற, சமூக நீதி அதுதான் எங்களது கொள்கையாக தலைவர் முன்னிறுத்தினார். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மதமோ, ஜாதியோ, பணமோ, இனமோ, மொழியோ, பாலினமோ எந்தவித பாகுபாடும் கிடையாது என்பதை உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு நாளும் அந்த உறுதியை எங்களது நெஞ்சில் தாங்கிக் கொண்டுதான் கட்சியில் நாங்கள் இணைந்து இருக்கிறோம்.
அதனால் ஜாதி பார்த்து, பணம் பார்த்து இனம் பார்த்து, மதம் பார்த்து என எதையும் வைத்து எங்கள் தலைவர் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை; சேவை செய்யக்கூடிய மனநிலை இருக்கிறதா என்பதை பார்த்து தான் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். ஜாதியை வைத்து இங்கே பேச வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கக்கூடிய எண்ணத்தை தான் நாம் பார்க்க வேண்டும். எங்களது தலைவருக்கு ஓட்டளித்த யாருமே, ரமேஷ் என்ற எம்எல்ஏவுக்காக யாரும் வாக்களிக்கவில்லை. அனைவரும் எங்களது தலைவர், முதல்வருக்காக ஓட்டளித்து இருக்கிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக அவரை திரைத்துறையில் பார்க்கும்போது, திரையில் அவரை ஜாதி பார்த்து, மதம் பார்த்து யாரும் பார்க்கவில்லை. அவரை தம்பியாக, அண்ணனாக, தங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து ஓட்டளித்து இருக்கிறார்கள். விஜய் நிறுத்திய வேட்பாளர்களையும், இன்று அமைச்சர்களாக பணி அமர்த்தியவர்களையும் மக்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். ஜாதி பார்த்து எல்லாம் இங்கு யாரும் எந்தவித பதவியும் வழங்கப்படவில்லை. எங்கள் தலைவருக்கு இது போன்ற பிரிவினையை பார்க்கக்கூடிய எண்ணம் துளியும் கிடையாது. இவ்வாறு அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்
ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட், யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
https://www.youtube.com/live/jBUlNHGvgkI?si=TnVYv4PDRf699FT4
வாசகர் கருத்து (37)
GMM - KA,இந்தியா
23 மே,2026 - 14:02 Report Abuse
அறநிலைய துறை அதிகாரிகளுக்கு கோவில் பூஜை பணி விதிகள் தெரியாது. பூசாரி பார்த்து கொள்வார். கோவில் இடங்கள் அளவிட, பராமரிக்க தெரியாது. தாசில்தார் பார்த்து கொள்வார். பின் அறநிலைய துறை அதிகாரிகள் பணி தான் என்ன? திமுகவிற்கு கோவில் நிலம், சொத்து, உண்டியல் வருவாய் போன்ற விவரங்களை தெரிவிக்க தான்? முதலில் பயனற்ற அறநிலைய துறை அதிகாரிகள் வெளியேற்றி, பணியை சேவை புரிய விரும்பும் பக்தர்கள் பொறுப்பில் ஒப்படைக்க வழி காண வேண்டும். 0
0
Reply
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
23 மே,2026 - 13:31 Report Abuse
கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவில்கள் கொள்ளையர்களது கூடாரமாகி போனது வேதனை அளிக்கிறது . 0
0
Reply
V.Mohan - ,இந்தியா
23 மே,2026 - 13:10 Report Abuse
திரு ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
23 மே,2026 - 12:41 Report Abuse
0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
23 மே,2026 - 12:36 Report Abuse
0
0
Reply
V.Mohan - ,இந்தியா
23 மே,2026 - 12:27 Report Abuse
வாழ்த்துக்கள் அமைச்சர் ரமேஷ் அவர்களே நல்ல நிர்வாகம் செய்ங்க. உங்க தலைவரின் மதச்சார்பற்ற சமூக நீதி வெல்லட்டும். ஆனால் ஒரு சிறு விண்ணப்பம். நீங்கள் நிர்வாகம் செய்யும் துறை இந்து அறநிலையத்துறை என்பதை மறக்க வேண்டாம். நிர்வாகத்தில் சாதி பார்க்க வேண்டாம் ஓக்கே ஆனால் மாற்று மதக்காரர்களை வேறு துறைகளுக்கு மாற்றவும். அதில் தவறில்லை. அதே போல இந்து அறநிலையத்துறையில் வேலை பார்ப்பவர்கள் இந்து இறை நம்பிக்கை உள்ளத என உறுதிமொழி எ 0
0
Reply
krishna - chennai,இந்தியா
23 மே,2026 - 12:17 Report Abuse
இந்த துறையின் அமைச்சராக இருக்க இவருக்கு தகுதி இருக்கிறதா என்பது போக போகத்தான் தெரியும். 0
0
ஈசன் - ,
23 மே,2026 - 12:43Report Abuse
என்ன தகுதி வேண்டும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்து கொண்டு பார்..பான் ஒழிக, பெரியார் வாழ்க என்று மக்களை இது நாள் வரை ஏமாற்றி வந்து தேர்தலின் போது மட்டும் தொகுதி பக்கம் தலை காட்டி விட்டு கரன்சியை வாரி இறைத்து மந்திரியாகி 70 வயதுக்கு மேல் பணத்தாசை பிடித்த ஒரு கரை வேஷ்டி தான் ஒரு மந்திரி என்ற உங்கள் மனதில் உள்ள பிம்பத்தை முதலில் தூக்கி எறியுங்கள் சார். ஒரு அரசு இயக்கம் தலைமை செயலர், துறை செயலாளர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், அதாவது அனைத்து IAS கைகளிலும் மட்டுமே உள்ளது. இவர்களுக்கு நிர்வாகத்தை நன்கு நடத்த தெரியும். மந்திரிகள் குறுக்கீடுகள் இல்லாமல் இருந்தாலே போதும். 0
0
Reply
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
23 மே,2026 - 12:14 Report Abuse
சிறுபான்மை துறைக்கு முஸ்லிமை அமைச்சராக நியமிக்கலாம் ஆனால் இந்து அறநிலையத்துறைக்கு பிராமணரை நியமித்தால் என்ன தவறு ? 0
0
Reply
Raajan - ,இந்தியா
23 மே,2026 - 12:14 Report Abuse
ஒரு பிராமணர் மந்திரி ஆக கூடாதா? இவர்களுக்கு ஹோமம் செய்ய,பொய் கணக்கு எழுத, மருத்துவம் செய்ய, கோர்ட்டில் பெயில் வாங்க மட்டுமே பிராமணர்கள் தேவை. ஒரு பட்டியல் இன தலைவரை முதல்வர் ஆக்க வேண்டியது தானே? ஒங்கோல் ஓகேவா? 0
0
Reply
Murthy - Bangalore,இந்தியா
23 மே,2026 - 12:05 Report Abuse
ஆம் ரீல்ஸ் பார்த்து தேர்வுசெய்துள்ளார் போலும் 0
0
Reply
மேலும் 26 கருத்துக்கள்...
மேலும்
-
புதிய கிழக்கு இந்திய கம்பெனிகளாகும் பன்னாட்டு நிறுவனங்கள்:ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை
-
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை: முதல்வர் விஜய் உறுதி
-
15 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று கிடைச்சாச்சு!
-
கடனை செலுத்தியவர் மீது வழக்கு ரூ.60,000 இழப்பீடு வழங்க உத்தரவு
-
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
-
நிரம்பிய கழிப்பறை கழிவுநீரால் அரசு மருத்துவமனையில் அவதி
Advertisement
Advertisement