கலிபோர்னியா தொழிற்சாலையில் ரசாயன கசிவு: 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விமான தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டதால், அப்பகுதியில் இருந்து 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் விமானம் மற்றும் விண்வெளி வீரர்கள் பயணிக்கும் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 7 ஆயிரம் கேலன் அளவு மெத்தில் மெத்தாகிரிலேட் என்ற ரசாயனம் தொட்டிகளில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படும் இந்த ரசாயனம், எளிதில் ஆவியாகக்கூடியது மற்றும் தீப்பிடிக்கக்கூடியது.
இதில் நேற்று மதியம், தொட்டிகளில் இருந்து ரசாயனம் கசிய துவங்கியது. இதனையடுத்து சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் அனைவரும் வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அழைத்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரசாயனம் கசிவுக்கு காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரசாயனம் வைக்கப்பட்டுள்ள 3 தொட்டிகளில் ஒன்றில் மட்டும், தானாக குளிர்விக்கும் வசதி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
புதிய கிழக்கு இந்திய கம்பெனிகளாகும் பன்னாட்டு நிறுவனங்கள்:ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை
-
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை: முதல்வர் விஜய் உறுதி
-
15 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று கிடைச்சாச்சு!
-
கடனை செலுத்தியவர் மீது வழக்கு ரூ.60,000 இழப்பீடு வழங்க உத்தரவு
-
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
-
நிரம்பிய கழிப்பறை கழிவுநீரால் அரசு மருத்துவமனையில் அவதி