தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (மே 23) 22 காரட் ஆபனத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 730 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,810 ரூபாய்க்கும், சவரன், 1,18,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (மே 22), தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 14,780 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் சரிவடைந்து, 1,18,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேசமயம், வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 295 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.95 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மே 23) 22 காரட் ஆபனத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 730 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
மேலும்
-
புதிய கிழக்கு இந்திய கம்பெனிகளாகும் பன்னாட்டு நிறுவனங்கள்:ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை
-
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை: முதல்வர் விஜய் உறுதி
-
15 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று கிடைச்சாச்சு!
-
கடனை செலுத்தியவர் மீது வழக்கு ரூ.60,000 இழப்பீடு வழங்க உத்தரவு
-
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
-
நிரம்பிய கழிப்பறை கழிவுநீரால் அரசு மருத்துவமனையில் அவதி