கோவையில் தாய்மார் இறப்பு அதிகம் மாநில சராசரியை மிஞ்சுகிறது

கோவை ?:2025 -26ல் கோவை கிராமப்புறங்களில் உயிருடன் பிறந்த 21,496 குழந்தைகளின் 10 தாய்மார்கள், நகர்ப்புறங்களில் உயிருடன் பிறந்த 21,189 குழந்தைகளின் 10 தாய்மார்கள் என மொத்தம் 20 தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.இது மாநில சராசரியை விட அதிகமாகும்.



கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சுகாதாரத்துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக, பிரசவத்தின் போதும் பிரசவத்திற்கு பிறகும் ஏற்படும் தாய்மார்களின் உயிரிழப்பு விகிதம் அப்போது (எம்.எம்.ஆர்.,) விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மாவட்டத்தில் வட்டார வாரியாக பதிவான தாய்மார் உயிரிழப்புகளில், பெரியநாயக்கன்பாளையத்தில் 4, காரமடையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

எஸ்.எஸ்.குளம், கிணத்துக்கடவு, சூலூர் மற்றும் பொள்ளாச்சி வடக்கு வட்டாரங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இது தவிர, கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 10 தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு சிகிச்சை பிரிவுகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவையான மேம்பாட்டு பணிகளை உடனடியாக சரி செய்ய, மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி உத்தரவிட்டார்.

அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பிரசவ கால அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

@block_B@ கோவை மாவட்ட எம்.எம்.ஆர்., விகிதம்block_B

Advertisement