எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் பயிற்சி முகாம்

கரூர்: கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், 2025-26ம் கல்வியாண்டில், பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு, அடுத்த தலைமுறைக்கான, எதிர் கால தயார் நிலை குறித்து மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது.

அதில் பைதான், செயற்கை நுண்ணறிவு இணைய பொருட்கள், ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில், கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன், அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலாளர் குரு சரண்குமார், நிறுவன வளர்ச்சி இயக்குனர் சக்தி ஸ்ரீ, செயல் இயக்குனர் முனைவர் குப்புசாமி, கல்லுாரி முதல்வர் முனைவர் முருகன், டீன் அட்மிஷன் டாக்டர் கே. சுந்தர்ராஜூ, மாணவர்கள் நலத்துறை தலைவர் டாக்டர் ரமேஷ் மற்றும் 250 மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement