மாநில கேரம் போட்டி
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் தமிழ்நாடு கேரம் அசோசியேசன், விருதுநகர் மாவட்ட கேரம் அசோசியேசன் சார்பில் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிதி உதவியுடன் மாநில அளவிலான கேரம் போட்டிகள் நடந்தது.
18 , 21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 315 வீரர்கள் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு கேரம் அசோசியேசன் பொதுச் செயலாளர் மரிய இருதயம், பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் ராஜகோபால், இணைச் செயலாளர் மாரியப்பன் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், பரிசு கோப்பையை காளீஸ்வரி கல்லுாரி முதல்வர் பாலமுருகன் வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட கேரம் அசோசியேசன் தலைவர் செல்வராஜன் செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement