கோயிலில் நாடகம் நடத்த அனுமதிக்க கோரி மனு
ராமநாதபுரம்: பரமக்குடி, திருக்கொளுவூர் கிராமத்தில் உள்ள ஆதிநாகநாதர் கோயில் திருவிழாவில் நாடகம் நடத்த அனுமதி அளிக்குமாறு எஸ்.பி., அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர். கிராம மக்கள் கூறியதாவது:
ஆதிநாகநாதர் கோயிலில் மே 21 முதல் மே 31 வரை திருவிழா நடக்கிறது. மூன்று தலைமுறைகளாக நடந்து வரும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம், இசைநிகழ்ச்சி நடத்தப்படும். நடப்பு ஆண்டில் நாளை பாண்டிசாமி நாடகம், சின்னக்கருப்பு பெரியகருப்பு புராண நாடகம், வெள்ளிக்கிழமை வள்ளி திருமணம் நாடகம் நடக்கவுள்ளது.
பல்வேறு சமூகத்தினர் ஒற்றுமையாக நடத்தும் ஆன்மிக நாடகங்களுக்கு உள்ளூர் போலீசார் அனுமதி தர மறுப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட எஸ்.பி., நாடகம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement