பால்குட விழா

காரைக்குடி:காரைக்குடி எல்லை முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடி இடையர் தெருவில் எல்லை முனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசியில் திருவிழா விமரிசையாக நடைபெறும். இவ்வாண்டு, 39வது ஆண்டு திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான பால்குடத் திருவிழா நடந்தது. முத்தாலம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் பறவை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுவர்கள் கருப்பர் வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement