கல் குவாரியில் மூழ்கி தொழிலாளி பலி
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே கல்குவாரியில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
அருப்புக்கோட்டையில் அருகே மலைப்பபட்டியை சேர்ந்தவர் மாயக்கண்ணன் 30, திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் அய்யனார் கோயில் அருகே உள்ள கல்குவாரி கிடங்கிற்கு குளிக்க சென்றுள்ளார். வெகு நேரமாகியும் திரும்பாததால் அவரது உறவினர்கள் தேடிப் பார்த்தனர்.
கல்குவாரிக்கு சென்று பார்த்த போது, அங்கு அவர் அணிந்திருந்த ஆடைகள் கிடந்தது. இவரின் தந்தை பொன்னுச்சாமி குவாரியில் இறங்கி மூழ்கி தேடிப் பார்த்துள்ளார். அங்கு ஒரு பாறையில் சிக்கி மாயக்கண்ணன் இறந்து கிடந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement