நீங்கள்தான் அடுத்த பிரதமர்; ராகுலை குஷிப்படுத்திய பிரசாந்த்!

60


நமது சிறப்பு நிருபர்

வரும் 2029 லோக்சபா தேர்தலில், காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைக் கும். ராகுல் பிரதமராவார்' எனக் கூறி இருக்கிறார், அரசியல் வியூக அமைப்பா ளர் பிரசாந்த் கிஷோர். பீஹாரில் தனிக் கட்சி தொடங்கி படுதோல்வி அடைந்தார் பிரசாந்த்.

தற்போது இவர், பீஹாரின் பாட்னா விற்கு அருகே உள்ள, பீஹார் நவ்நிர்மான் ஆசிரமத்தில் தங்கி உள்ளார். அடுத்த சட்ட சபை தேர்தல் வரை, இங்கு தான் வசிக்கப் போகிறாராம். ஆனால், இங்கிருந்தே அரசி யல் ஆலோசனை அளித்து வருகிறார்.

'த.வெ.க.,வுடன் காங்., கூட்டணி அமைக்க வேண்டும். தி.மு.க.,விடமிருந்து விலக வேண்டும்' என, ராகுலுக்கு முத லில் கூறியவர், பிரசாந்த் கிஷோர். இவர், ராகுலுக்கு தன் தேர்தல் ஆலோசனை நிறுவனமான, 'ஐ - பேக்' வாயிலாக வியூகங்களை வகுத்து வருகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவ ரியில், உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு, பா.ஜ.,வின் யோகி ஆதித்யநாத், தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். இவரை தோற்கடிக்க, காங்கிரசுக்கு ஆலோசனை அளித்துள்ளார் பிரசாந்த்.

'தி.மு.க.,வை முதுகில் குத்தியது போல, உ.பி.,யில், சமாஜ் வாதி கட்சியுடன் உள்ள உறவை காங்., முறித்து, மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அப்படி செய்தால், காங்., ஆட்சி அமைக்கும்.

தொடர்ந்து, 2029 லோக்சபா தேர்தலிலும், காங்., ஆட் சியை பிடிக்கும்' என, ராகுலுக்கு ஆலோசனை அளித்து, அவரை குஷிப்படுத்தி உள்ளாராம் பிரசாந்த் கிஷோர். கடந்த லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதியுடன் அமைத்து, உ.பி.,யில், 17 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வென்றது காங்கிரஸ். கூட்டணி

ராகுலுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த அறிவுரை, மல்லிகார் ஜுன கார்கே உட்பட பல காங்., தலைவர்களுக்கு பிடிக்க வில்லை. 'பிரசாந்த் கிஷோரின் பேச்சை கேட்டு கூட்டணி அமைத்தால், நம் கதி அதோகதிதான். ஆனால், ராகுலுக்கு யார் புரியவைப்பது?' என, குழப்பத்தில் உள்ளனர் காங்., தலைவர்கள்.

கருத்துக்கள் சொல்ல; ndussh@dinamalar.in

Advertisement