துாய்மை பணியாளர் உணவில் இதென்ன புழு! : வயிற்று வலியால் பலர் அவதி
கோவை:தங்களுக்கு வழங்கப்படும் காலை உணவில் புழு இருப்பதாக புலம்பும் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், இந்த உணவை தவிர்த்து பட்டினியுடன் பணிபுரிகின்றனர்.
மாநகராட்சியில் 1,900க்கு மேற்பட்ட நிரந்தரம் மற்றும்4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள், டிரைவர், கிளீனர் என 5000க்கு மேற்பட்டோர் உள்ளனர்.
இவர்களுக்கு கடந்த பிப்., 9 முதல் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், உணவு தரம் இல்லாமல் வினியோகிக்கப்படுவதாக அதிருப்தி நிலவுகிறது.
இந்த உணவை சாப்பிடும் பலர் தினமும் வயிற்றுவலியால் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இந்த உணவை பல பணியாளர்கள் சாப்பிடுவதில்லை. உணவில் புழு இருப்பதுதான் வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணம் என தெரியவந்துள்ளது.
தெற்கு மண்டலம், 91வது வார்டு போத்தனுாரில் துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருப்பதாக கூறும் 'வீடியோ' வைரலாகி வருகிறது.
''பணியாளர்களின் காலை உணவுக்கு ஒருவருக்கு ரூ.49 செலவிடப்படுகிறது. இந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு வயிற்று வலி ஏற்படுகிறது.
தரமற்றகாலை உணவை வார்டுக்கு 10 பேராவது தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி நிர்வாகத்துக்கு எங்கள் மீது அக்கறை இல்லாதது இதில் இருந்து தெரிகிறது,'' என்று குற்றஞ்சாட்டுகிறார் பாரதிய மஸ்துார் சங்க துாய்மை பணியாளர் பிரிவு மாவட்ட அமைப்பு இணை செயலாளர் ஸ்டாலின் பிரபு.
'எங்களுக்கு உணவு வேண்டாம்; சம்பளத்தை உயர்த்தி கொடுத்தாலே போதும்' என்பதே துாய்மை பணியாளர்கள் பலரின் கோரிக்கை.
ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவித்த ரூ.721 தினக்கூலியை மாநகராட்சி வழங்குவதில்லை. பணி நிரந்தரம், தினக்கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தி.மு.க.,-அ.தி.மு.க., என இரு திராவிட கட்சிகளிடமும் போராடி ஓய்ந்துபோன இப்பணியாளர்கள், தமிழக முதல்வர் விஜய் நிச்சயம் தீர்வு அளிப்பார் என காத்திருக்கின்றனர்.
மேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி