சிறுமிக்காக மெழுகுவர்த்தி ஏந்தி முதியோர் மனமுருக பிரார்த்தனை
கோவை: 10 வயது சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டு முதியவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. சிறுமியின் ஆன்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டியும், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள 'ஈரநெஞ்சம்' காப்பகத்தில் உள்ள முதியவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கும் மன வலிமை கிடைக்க வேண்டும். இனி எந்த குழந்தைக்கும் இப்படிப்பட்ட கொடுமை நேரக்கூடாது.
குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு மற்றும் சமூகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முதியவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி