எபோலா வைரஸ் பரவல் எதிரொலி: போகக்கூடாத நாடுகள் பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு
புதுடில்லி: எபோலா வைரஸ் பரவல் காரணமாக காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆப்ரிக்காவின் உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. விலங்குகளிடமிருந்து பரவும் இந்த வைரஸ், மனிதர்களை எளிதில் தாக்கக்கூடியது. இதை கண்டறிந்து, முறையான சிகிச்சை அளிக்க தவறினால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தொற்று பரவலை, உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்தது. நாடு முழுவதும் கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், எபோலா வைரஸ் பரவல் காரணமாக காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நாடுகளில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் இந்தியக் குடிமக்கள், உள்ளூர் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படி யாராவது அந்த குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால், குணமாகும்வரையில் தயவுசெய்து திரும்பிவரவேண்டாம்.
சரிங்க ஆபீசர்
அரேபிய நாடுகள்ள நல்லாத்தான் இருக்கானுங்க கொஞ்சமாவது குறையுதா?
ஒட்டகம் காரணமா ?
அரேபிய நாடுகள் இல்லையென்றால் பூவாவுக்கும் , பெட்ரோலுக்கும் சிங்கி அடிப்பியா மங்கி சாரி சங்கீமேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி