ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில், நண்பர்களுடன் ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலியானார்.

பள்ளிக்கரணை, துலுக்கானத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி, 67; கட்டட தொழிலாளி. இவர், நேற்று மாலை தன் நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து, பள்ளிக்கரணை அணை ஏரியில் குளித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

மேடவாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், உடலை மீட்டு, பள்ளிக்கரணை போலீசார் வசம் ஒப்படைத்தனர். போலீசார், சக்கரபாணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரது நண்பர்களிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement