செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 1,164 ஏரிகளில் வண்டல் மண் மற்றும் களிமண் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 583 ஏரிகள், ஊரக வளர்ச்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள 581 ஏரிகள் என, மொத்தம் 1,164 ஏரிகளில், விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண், களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துசெல்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
மேற்படி அனுமதியை பெற, tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பயனாளிகளின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண், களிமண் துார்வாரி எடுத்துச்செல்லப்பட வேண்டிய நீர்நிலைகள், அமைந்துள்ள கிராமம் ஆகியவை, அதே வருவாய் வட்டத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.
விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர், விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும்.
மேலும் மண் பாண்ட தொழிலாளராக இருப்பின், விண்ணப்பித்த பின், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், அதை உறுதி செய்த பிறகு அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பதாரரால் அளிக்கப்பட்ட தகவல்கள் திருப்திகரமாக இருப்பின், சம்பந்தப்பட்ட வட்டாட்சியரால் பத்து நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.
வட்டாட்சியரால் அனுமதி பிறப்பிக்கப்பட்ட ஆணை கிடைக்கப்பெற்ற பயனாளிகள், தொடர்புடைய நீர்நிலை ஆதாரங்களின் பொறுப்பு அலுவலர்களை அணுகி, வண்டல் மண், களிமண் எடுப்பதற்கு வரையறை செய்யப்பட்டுள்ள பகுதியில், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டும் வண்டல் மண், களிமண் எடுத்துச்செல்ல வேண்டும் என, கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்தார்.
மேலும்
-
விஜய்க்கும், புதிய அரசிற்கும் 6 மாதம் முதல் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்கணும்; சொல்கிறார் துரை வைகோ
-
பிரதமரை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்: பா.ஜ., வலியுறுத்தல்
-
தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் ராஜினாமா!
-
பாகிஸ்தான் பயங்கரவாதமே இந்தியாவின் பெருங்கவலை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து
-
போதிய தண்ணீர் இல்லாததால் பயிர் சாகுபடி பாதியானது
-
30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவிகள்