காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 2024 பிப்ரவரியில், மத்திய அரசு ஜமாத்-இ-இஸ்லாமியை ஒரு சட்டவிரோத அமைப்பாக அறிவித்து,உபா சட்டத்தின் கீழ் அதன் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தது. ஜமாத்-இ-இஸ்லாமி பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள், பிரிவினைவாதம் மற்றும் இந்திய எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த அமைப்புக்கு எதிராக மத்திய மற்றும் தெற்கு காஷ்மீரில் உள்ள பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஸ்ரீநகரில் உள்ள லால் பஜார் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தின் சில பகுதிகள் உட்பட பல பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத நடவடிக்கைகள் மற்றும் இந்திய எதிர்ப்புப் பிரசாரங்களை முன்னெடுக்கவும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
விஜய்க்கும், புதிய அரசிற்கும் 6 மாதம் முதல் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்கணும்; சொல்கிறார் துரை வைகோ
-
பிரதமரை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்: பா.ஜ., வலியுறுத்தல்
-
தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் ராஜினாமா!
-
பாகிஸ்தான் பயங்கரவாதமே இந்தியாவின் பெருங்கவலை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து
-
போதிய தண்ணீர் இல்லாததால் பயிர் சாகுபடி பாதியானது
-
30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவிகள்