நாட்டில் கருவுறுதல் விகிதம் சரிவு; தமிழகம், கேரளாவில் முதியோர் விகிதம் அதிகரிப்பு
நமது சிறப்பு நிருபர்
இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் சரிந்துள்ளது. பீஹார், உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 6 மாநிலங்களை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது.
இந்தியாவில் தற்போது 140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதுள்ள மக்கள் தொகை குறையாமல், அதே அளவு நீடிப்பதற்கு குழந்தை பிறப்பு விகிதம் 2.10 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால், குழந்தை பிறப்பு விகிதம் இந்திய அளவில், 1.90 சதவீதமாக குறைந்துள்ளது.கருவுறுதல் குறைந்த போதிலும் தமிழகத்தில் 60வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள்தொகை 14.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 0-14 வயதுக்குட்பட்டோர் மக்கள் தொகையில் வெறும் 18% மட்டுமே உள்ளனர். பீஹாரில் இந்த விகிதம் 31.5% ஆக உள்ளது. ஆந்திரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் 19% ஆக உள்ளது. இந்தியாவில் உள்ளவர்களில் சுமார் நான்கில் ஒருவர் (24%) 0-14 வயதுக்குட்பட்டவர் ஆவார்.
மிகக் குறைந்த கருவுறுதல் விகிதம் கொண்ட மாநிலங்களில் கூட,இந்தியாவில் வேலைக்கு செல்லும் வயது வயது மக்கள்தொகை (15-59 வயது) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது, இந்தியாவிற்கான மக்கள்தொகை வளர்ச்சி வாய்ப்பு இன்னும் முடிவடையவில்லை என்பதைக் காட்டுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 15-60 வயதுக்குட்பட்டோர் 66.4% ஆக உள்ளனர் (2014-ல் இது 64% ஆக இருந்தது).
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் விகிதம் 8.6%-லிருந்து 9.7%-ஆக உயர்ந்துள்ளது, மேலும் இது அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்ச விகிதத்தைக் கொண்ட மாநிலம் கேரளா (15%) ஆகும். தமிழகத்தில் 14.2 சதவீதமாக உள்ளது.
மேலும்
-
அதிமுக உடன் கூட்டணி அமைக்க துள்ளி குதித்தவர் உதயநிதி: காங் - எம்பி மாணிக்கம் தாகூர் ஆவேசம்
-
தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியா: அரசு விளக்கம்
-
வண்டல் மண் எடுப்பதில் நடந்த வசூலுக்கு முற்றுப்புள்ளி கலெக்டர்கள் கிடுக்கிப்பிடியால் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்
-
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல செயல்திட்டம் அமைச்சர் ஆதவ் உறுதி
-
பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு ரத்தா? சி.பி.எஸ்.இ., மறுப்பு
-
விஜய் தலைமையில் உருவாகிறது மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி