தாமஸ் ஆல்வா எடிசனை மிஞ்சிய இந்திய விஞ்ஞானி : அமெரிக்காவில் சாதித்து காட்டி அசத்தல்
- நமது சிறப்பு நிருபர் -
டில்லியை சேர்ந்த ஐஐடி பட்டதாரியான குருதேஜ் சந்த், அமெரிக்காவிற்கு பிஎச்டி படிப்புக்காக சென்றவர் அங்கு விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனையை மிஞ்சி அமெரிக்காவின் 7வது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளராக உருவெடுத்துள்ளார்.
இந்தியா தொழில்நுட்பத் துறை பல்வேறு சாதனைகளை எட்டி உள்ளது. உலகளவில் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் இந்தியர்கள் வலம் வருகின்றனர். உலகையே ஆட்டி படைக்கும் கூகுளின் தலைமை பொறுப்பில் இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை திகழ்ந்தார். இவரைப் போன்றே அமெரிக்காவில் புகழப்படும் மற்றுமொரு இந்தியராக உருவெடுத்துள்ளார் குருதேஜ் சந்த். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார்.
அப்படி இவர் என்ன செய்தார் என கேட்கலாம். விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் காப்புரிமை சாதனையான 1093-ஐ முறியடித்து, அமெரிக்காவில் மட்டும் 1400-க்கும் அதிகமான காப்புரிமைகளையும், உலகளவில் 2200-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளையும் பெற்றுள்ளார். உலகளவில் அதிக காப்புரிமைகளை வைத்துள்ள டாப் கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர். அமெரிக்க வரலாற்றில் 7வது அதிக காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பாளராக இவர் உயர்ந்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த குர்தேஜ் சிங் சந்து, பஞ்சாப் மாநிலம் அமர்தசரஸில் பிறந்து வளர்ந்தவர். குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடங்கி, பின்னர் டில்லி ஐஐடி-யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முதுகலை பட்டம் (M.Tech) பெற்றார். பிஎச்டிக்காக அமெரிக்காவிற்குச் சென்றவர் அங்குள்ள 'வட கரோலினா பல்கலைக்கழகத்தில்' இயற்பியலில் தனது முனைவர் பட்டத்தை (Ph.D) முடித்தார்.
பின்னர் உலகளாவிய மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சியில் முக்கிய நபர் ஆனார். 35 ஆண்டுகளாக மைக்ரான் டெக்னாலஜியுடன் இணைந்து பணியாற்றுகிறார். நவீன எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினித் துறையில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் மாபெரும் கண்டுபிடிப்புகளை இவர் செய்துள்ளார். நவீன டிஜிட்டல் யுகத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டேட்டா சென்டர்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன 'மெமரி சிப்கள்', சிறியதாகவும், வேகமாகவும் செயல்பட இவரது கண்டுபிடிப்புகள் மிகவும் அடிப்படையாக அமைந்துள்ளன. இப்போது அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் வழிநடத்தி கொண்டிருக்கிறார்.
குர்தேஜ் சிங் சந்துவின் அசாதாரண பயணத்தை சுட்டிக்காட்டி, உலகளவில் இந்தியர்களின் திறமை பறைசாட்டப்படுவதை வலைதள வாசிகள் வைரலாக்கி வருவதோடும் அவரை பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.
எம். பி. பி. எஸ். முடித்தால் ஒரு வருடம் பயிற்சி செய்தால் தான் சான்றிதழ் என்பது போல, மற்ற படிப்புகளுக்கும் ஒரு வருடம் பயிற்சி செய்தால் தான் சான்றிதழ் என்ற சட்டம் இருந்தால் எப்படி இருக்கும்.
Congrats sir for your vast achievements.By the way we should admire our Indians also . I also want to know why we are going to west particularly the u.s. for the results.Dont india has such things to demonstrate ????facliate
இந்தியா அதிகளவு விஞ்சான ஆராய்ச்சிகளுக்கு பண ஒதுக்கீடு செய்து விஞ்சானிகளிடமிருந்து ஆராயிச்சிக்கட்டுரைகளை வரவைத்து மேலும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். மற்றும் ஆராய்ச்சிக்கூடங்களை கட்டமைத்து இலவசமாக ஆராய்ச்சிகளுக்கு ஒதிக்கீடு செய்ய வேண்டும். ஆராயிச்சிக்காலத்தில் உதவித்தொகை அன்பழைக்க வேண்டும் .
வாழ்த்துகள் நம்ம ஊரில் செய்தால் சாதனை செய்தவன் எந்த ஊர் என்ன ஜாதி என்று ஆராய்ச்சி நடக்கும்.
அமெரிக்கா வுக்காக உழையுங்கள். வாழ்த்துக்கள்
காட்டுமிராண்டி தேசமான அமெரிக்காவை விட்டு நம் தேசத்தை சேந்த விஞ்ஞானிகள் தாயகம் திரும்ப வேண்டும், அமெரிக்கா தன் விஞ்ஞான வளச்சியை நம் தேசதிற்கு எதிராகவும் உலகத்தில் உள்ள மணித குலத்துக்கு எதிராகவும் தான் இதை பயன்படுத்தும். அமெரிக்காவின் வளர்ச்சி உலகின் வீழ்ச்சி.
வாழ்த்துக்கள்! - அமெரிக்க சென்றதனால் பிழைத்தார்! இந்தியாவில் இருந்திருந்தால் கேஜ்ரிவால் மான் சிங் போன்ற ஆட்சியாளர்கள் இடம் அல்லல் பட வேண்டி இருந்திருக்கும்! தமிழகத்திலும் விசில் அடிக்க சினிமாவில் நடிப்பவர் பார்ப்பவர் போன்றவர்களுக்கு தான் முன்னுரிமை! சிறிய வயதில் அமைச்சர் ஆகலாம்! ஐஏஎஸ் ஐபிஎஸ் ஏன் உங்களைப் போன்ற விஞ்ஞானிகளை கூட விலைக்கு வாங்கலாம்!
கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை மட்டும் வைத்து மற்ற ஆரம்ப கால கண்டுபிடிப்புகளுடன் எடை போட கூடாது.
great achievement
இது, தங்கலீஷ் தமிழர்கள் எப்போதும் மேலோட்டமான செய்தியையே படிப்பார்கள் என்ற உண்மையை உணர்த்துகிறதா. SEMICONDUCTOR மற்றும் ELECTRONIC CHIP களின் கட்டமைப்பு நுணுக்கங்களை மேம்படுத்தும் நுட்பமான ஆராய்ச்சியையும், மேம்படுதலையும் நிறைய நாடுகள் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கின்றன. வெறுமனே இந்த 35 வரி செய்தியை பிரசுரிக்க வேண்டுமெனில் தலைவர் கண்டுபிடித்த " குறிப்பிட்ட சிறப்புகளை " சற்று ஆழமாக வெளியிட்டிருக்க வேண்டும்.
சங்கரு.. வாழ்த்த மனமில்லையாயினும் தினமலரை நொள்ளை சொல்லாமல் நீவிர் பதிவிட்டிருக்கலாம். இந்த லிங்கை தேடிப் பாரும். s://www.researchgate.net/profile/Gurtej-Sandhuமேலும்
-
இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி: இபிஎஸ் விமர்சனம்
-
ஒரு துளி ரத்தத்தில் புற்றுநோயை கண்டறியும் கருவி; சீன விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு
-
தவணை முறையில் பெட்ரோல் விலை உயர்வு; ராகுலுக்கு வருத்தம்
-
இபிஎஸ் அணிக்கு தாவிய அதிமுக எம்எல்ஏ
-
முதல்வர் விஜய் குறித்து ஆபாச வார்த்தைகளால் அவதூறு; திருநெல்வேலியில் திமுக ஆதரவாளர் கைது
-
கடுங்குற்றங்களில் ஈடுபட்டால்... முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு