கடுங்குற்றங்களில் ஈடுபட்டால்... முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

23

சென்னை: கடுங்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்கு பதிந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் விஜய் இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.


சட்டம்-ஒழுங்கு நிலைமை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, காவல்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனையின் போது, தமிழகத்தில் கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை; தினமலர் யூடியூப், வெப்சைட் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement