முதல்வர் விஜய் குறித்து ஆபாச வார்த்தைகளால் அவதூறு; திருநெல்வேலியில் திமுக ஆதரவாளர் கைது

39

திருநெல்வேலி:முதல்வர் விஜய் பற்றி அவதுாறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய நெல்லை முன்னீர்பள்ளத்தை சேர்ந்த திமுக ஆதரவாளர் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் (30) என்பவர், முதல்வர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவேற்றியதுடன், அவதூறாக பேசியதாகவும் புகார் எழுந்தது. அவர் வெளியிட்ட வீடியோவில் முதல்வர் விஜய் ஆபாசமான கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டி இருந்தார்.


இந்நிலையில் பாளையங்கோட்டை போலீசார் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து ஜேம்ஸை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கணிப்பொறியியல் பட்டதாரியான ஜேம்ஸ் பிரபல ஆப்பிள் நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. திமுகவுக்கு ஆதரவாகவும் விஜய்க்கு எதிர்ப்பாகவும் பேசி வீடியோ வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement