தவணை முறையில் பெட்ரோல் விலை உயர்வு; ராகுலுக்கு வருத்தம்

2

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து, பிரதமர் மோடி சத்தமில்லாமல் பணத்தை பறிப்பதாக லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடியை பணவீக்க நாயகன் எனக் குறிப்பிட்டு அவர் விடுத்துள்ள பதிவில், "மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து சத்தமில்லாமல் பணத்தைப் பறிப்பதற்காகவே, பெட்ரோல், டீசல் விலையைத் தவணை முறையில் உயர்த்துகிறார்கள்.

ஒரு பொருளாதாரப் புயல் வரப்போகிறது என்று நான் முன்பே எச்சரித்து வருகிறேன். ஆனால், மோடி வழக்கம் போல், தேர்தல்களில் மும்முரமாக இருந்தார். தேர்தல் முடிந்த அடுத்த நிமிடமே, பெட்ரோல், டீசல் விலை ரூ.8 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு தொடர்ந்துகொண்டே இருக்கும்.

தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அளிப்பதும், மற்ற நேரங்களில் பொதுமக்களின் பாக்கெட்டுகளைப் பதம் பார்ப்பதுமே அவருக்கு வேலை," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement