ஒரு துளி ரத்தத்தில் புற்றுநோயை கண்டறியும் கருவி; சீன விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

14


நமது சிறப்பு நிருபர்

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு துளி ரத்தத்தில் இருந்து புற்றுநோயை மிகத் துல்லியமாகக் கண்டறியும் கருவியை கண்டுபிடித்து இருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சீனாவின் ஹாங்சோவில் உள்ள வெஸ்ட்லேக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள்,செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரே ஒரு சொட்டு காய்ந்த ரத்தத்தில் இருந்து குடல்,வயிறு மற்றும் கணையப் புற்றுநோய்களைக் கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கி இருக்கும் கருவிகள் மூலம் ஒரு துளி ரத்தத்தில் புற்றுநோயை மிகத்துல்லியமாக, ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.

இந்த புதிய கண்டுபிடிப்பு புற்றுநோயைக் கண்டறிவதில் மருத்துவ உலகில் பெரும் புரட்சியாக கருதப்படுகிறது. ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதில், இந்தப் புதிய கண்டுபிடிப்பு வழக்கமான முறைகளை விட 10,000 மடங்கு துல்லியமாக இருக்கும்.


சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த கருவி மருத்துவ துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் இந்த கருவியை பயன்பாட்டுக்கு கொண்டு வர சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement