வேலுமணி கோஷ்டி எம்எல்ஏக்கள் 5 பேர் இபிஎஸ்க்கு ஆதரவு
சென்னை: தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், எஸ்பி வேலுமணி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் மீண்டும் இபிஎஸ் அணிக்கு தாவியுள்ளனர்.
சட்ட சபை தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் இபிஎஸ் மற்றும் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் அடங்கிய அணி என்று இரண்டாக பிளவு பட்டது. திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க இபிஎஸ் முயன்றதாக குற்றம்சாட்டிய எஸ்பி வேலுமணி அணி, தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தது.
இதையடுத்து, சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரின் கட்சி பொறுப்புகளை பறித்து இபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும் மாவட்ட செயலாளர்களை அழைத்து தனது பலத்தையும் நிரூபித்தார்.
இதனிடையே, அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று சிவி சண்முகம் தரப்பு எதிர்பார்த்து இருந்ததாக கூறப்படும் நிலையில், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கட்சிகளின் நிபந்தனைகளால் அது நடக்காமல் போனது. இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், எஸ்பி வேலுமணி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார், மீண்டும் இபிஎஸ் அணிக்கு தாவியுள்ளார். சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை வீட்டில் சென்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
தொடர்ந்து, எஸ்பி வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மேலும் மூவர் இபிஎஸ்க்கு ஆதரவு அளித்துள்ளனர். சுகுமாரை தொடர்ந்து பண்ரூட்டி எம்எல்ஏ மோகன், அந்தியூர் எம்எல்ஏ ஹரிபாஸ்கர், சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன், காங்கேயம் எம்எல்ஏ நடராஜ் ஆகியோர் அணி மாறினர்.
இது சிவி சண்முகம் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.
விஜய்க்கு தேவை 6-8 MLA க்கள் .VCK/ IUML /கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு செக் வைக்க.திமுக அதிமுக கட்சில இருந்து MLA க்கள் ராஜினாமா செய்யவேண்டும் அதை சரியாக திட்டமிட்டே நடத்தி ருக்காங்க பிளவு சாத்தியப்படவில்லை அப்படி பிளவு பட்டால் எல்லோருக்கும் பதவி தருவது சிரமம் இது சிறப்பு
குதிரை பேரம், யானை பேரம் என பல பேச்சுக்கள். ஆனால் மது குடித்த குதிரை போல அவிழ்த்து கொண்டு ஓடுவது தெரிகிறது.
S.P. வேலுமணிக்கு எடப்பாடியை நன்றாக தெரியும் நடந்து முடிந்ததை பெரிது படுத்தி செய்தி ஆக்காமல் MGR ஜெயலலிதா கட்சியை காப்பாற்றி பாருங்கள் அரியணை ஏறமுடியாவிட்டாலும் தன்மானத்தோடு வாழுங்கள். லீமாரோஸ் மூலம் சாகவேண்டிய அவசியமில்லை. எடப்பாடியார் செங்கோட்டையனை விட்டு விட்டு லிமரோசை பிடித்தார். அதுபோல் அணி போட்டது தப்பில்லை என்று சொல்லவும். இனத்தை இடித்து விட்டீர்கள் நடராஜ் வழியா ? இல்லை ஜெயக்குமார் வழியா ?
ஒரு ராஜ்ய சபா எம்பி பதவியும் நாசமாக போய் விட்டது
எல்லாம் பெட்டி
அதிமுகவை அழித்த கேடுகெட்ட நயவஞ்சக எடப்பாடி நாசமா போவிங்கடா வயிறு எரியுது புரட்சித்தலைவர் கட்சி அழிந்துவிட்டது . அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கபட்ட மூன்று உருப்பினர்கள் பணம் பதவிக்காக மாறியது கேவலத்தின் உச்சம் என்றைக்கு லாட்டரி அயோக்கியர்களை கட்சியில் சேர்த்தார்களோ அப்பொழுதே அதிமுகவும் கூத்தாடி கட்சியும் சீக்கிரமாக அழியும் என்று ஆதவ் என்கிற கிருஸ்தவ கேவலமானவனால் தமிழகம் வடமாநிலங்களைவிட மிக மோசமான பாதையில்
திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மூடுவிழா நடத்துவது மட்டுமே இனிமேல் தமிழகத்தையும், பெண்களையும், குழந்தைகளையும் நல்லமுறையில் காப்பாற்ற இருக்கும் ஒரேவழி, இல்லையென்றால் அவர்கள் தமிழகத்தை கேலிக்கூத்தாகி தலைகுனிய வைத்துவிடுவார்கள்.
எதிர்க்கட்சி அவசியம் அரசியலில். கட்டுப்பாடு இல்லாத ஆளுங்கட்சி பிரேக் இல்லாத வண்டிபோல் ஆபத்து.
அதிமுகவின் 47 எம்.எல்.ஏ க்களும், எந்த கட்சியில், எந்த கூட்டணியில் இருக்கிறார்கள் என்று தினமும் செய்தித்தாளில் இலவசமாக, பிரதிபலன் பார்க்காமல், பிரசுரிக்க வேண்டுமென தினமலர் ஆசிரியர் குழுவை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். செய்வீர்களா?
விஜய் செய்த தவறு. ஐந்து அமைச்சரவை இடங்களை நிரப்பாமல் வைத்திருக்க வேண்டும்.
சட்டி சுட்டதடா.