மூடப்பட்ட பாதை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை: பீளமேடு ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் பகுதியில், ரயில்வே நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ள பாதையை திறக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.

பீளமேடு ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் பகுதியில், பீளமேடு செங்காளியப்பன் நகர் வ.உ.சி.காலனி இரண்டையும் கடத்து பீளமேட்டுக்கும், விளாங்குறிச்சி செல்லும் பாதையை பராமரிப்பு பணிககளுக்காக ரயில்வே நிர்வாகம் மூடியுள்ளது. பணிகள் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால் விளாங்குறிச்சி, காளப்பட்டி மற்றும் சரவணம்பட்டிக்கு செல்பவர்கள், பீளமேட்டுக்கு வருபவர்கள் வழியில்லாமல் சிரமப்படுகின்றனர்.

இந்த பாதையை திறக்க ரயில்வே நிர்வாகத்துடன் கலெக்டர் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement