விசிகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகல்

6

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக, விஜய் தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்துக் கொண்டது. அந்தக் கட்சியின் எம்எல்ஏ வன்னியரசு சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு அறிவித்துள்ளார். இவர், முந்தைய சட்டசபையில் எம்எல்ஏவாக இருந்தவர்.

பாபு தன் அறிக்கையில், ''நேற்று வரை ஒரு நடிகரை ஆர்எஸ்எஸ், பாஜ பெற்றெடுத்த பிள்ளை என்று கடுமையாக விமர்சித்த திருமாவளவன், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, கொள்கைகளில் தடம் மாறத் தயார் ஆகி விட்டார் என்பதையே காட்டுகிறது. குழப்பத்திலும், அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் (திருமாவளவன்) கீழ் இனியும் என்னால் பயணிக்க முடியாது,'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement